தேனி மாவட்டம்: கம்பம் நகர நாம் தமிழர் கட்சியினர் குருதிக்கொடை வழங்கும் முகாம்!!!
11/20/2023
0
கம்பத்தில் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கம்பம் நகர நாம் தமிழர் கட்சியினரும், அரசு மருத்துவமனையும் இணைந்து குருதிக்கொடை மற்றும் கண்தான சிறப்பு முகாம் நடத்தினர்.மேற்கு மாவட்ட செயலாளர் பா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமானது மண்டல செயலாளர் மு.பிரேம்சந்தர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், இந்த நிகழ்வில் கம்பம் தொகுதி செயலாளர் அப்துல், மாவட்ட தொகுதி தலைவர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன், கலாம் குருதி கொடை மாவட்ட செயலாளர் வடிவேல்,இவர்களுடன் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர்.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி முடிவில் குருதி கொடை அளித்தவர்களுக்கு சான்றிதழ், மற்றும் பதக்கம் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
