திருச்செந்தூர்: தெரியாத உண்மை: திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்!!

sen reporter
0


 இது திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசல்.

 கருவறையை

விட இந்த வாசல் அதிகமான உயரத்தில் இருப்பதால், 


கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரே ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் இந்த வாசல் மூடப்பட்டுதான் இருக்கும்.


ராஜ கோபுரத்தின் வாசல் மட்டுமல்ல, கோயிலின் மிக அருகே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலின் மட்டமும் கருவறையை

விட அதிகமான உயரத்தில்தான் இருக்கிறது. 


இருந்தாலும் கோயிலினுள் ஒரு துளி கடல்நீர் கசிவை பார்க்க முடியாது. 


அந்த அளவுக்கு மேலுள்ள மிருதுவான மணல் பாறைகள் அனைத்தையும் முழுமையாக தோண்டி எடுத்து அதனுள் கடினப்பாறைகளை பதித்து கோயிலை கட்டியுள்ளார்கள்.


1649ல் திருசெந்தூர் கோயிலை  சில காலம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த  டச்சு வீரர்கள், கோயிலை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்த போது, கோயிலுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலை முற்றிலும் தகர்ப்பதர்க்காக பீரங்கிகள் கொண்டு தொடர்ந்து தாக்கினார்கள். 


இருப்பினும் சிறிதளவு

கூட சேதம் கோயிலுக்கு ஏற்படவில்லை.


அந்த அளவுக்கு கோயிலின் கட்டுமானம் உறுதியாக இருந்திருக்கிறது.


அதிர்ந்து போன டச்சுகாரர்கள் கோயிலிலுள்ள இரண்டு சிலைகளை மட்டும் எடுத்து கொண்டு ஓடி விட்டார்கள்! 


இந்த நிகழ்வு நடந்த போது அங்கு இருந்த டச்சு வீரர் ஒருவர் தன்னிடம் இதை கூறியதாக ‘A Description, Historical and Geographical, of India (1785)’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரெனில் (M Rennel) குறிப்பிட்டுள்ளார்.


டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி குடியேறிய இடங்களில் அவர்களால் அழிக்க முடியாமல் விட்டுப் போன ஒரே கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top