உத்தமபாளையம் பகுதியில் பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்கதொட்டி, சாக்கடை நீர் தெருக்களில் ஓடுதல், குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் காட்சி மற்றும் பாதைகள் சரியில்லாமல் பொதுமக்கள் விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழல் அரசு அதிகாரிகளின் கண்களை மறைக்கும் அவல நிலை?
அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள வாய்க்கால் பாலத்தில் முன்னால் குப்பைகளை டன் கணக்கில் குவித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இடங்களில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?
பெரும்பாலான தெருக்களில் பாதைகள் பெயர்ந்து மக்களின் உயிரை பறிக்க காத்திருக்கும் பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் காரணம் ஏன்?
வார்டு பகுதிகளில் நீர்த்தேக்க தொட்டி இருந்தும் செயல்படாமல் உள்ளதை அரசு அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க முன் வராததற்கு காரணம் என்ன?
மேலும்,அரசு அதிகாரிகள் வார்டு பகுதிகளில் பார்வையிட வரும்போது அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் தடுப்பதாகவும் பரவலாக கூறப்படுகிறது.
இதன்பிறகாவது பார்ப்போம்... பாதிப்படைந்த நகர் பகுதிக்கு அரசு அதிகாரிகள் வருவதற்கு பயப்படுகிறார்களா??
பொறுத்திருந்து பார்ப்போம், விரைவில் தீர்வுக்காக காத்திருக்கும் மக்கள்.
