தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் அயன்கரிசல்குளம் மஜ்ரா மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி (42), கடந்த 20ம் தேதி இரவு பந்தல்குடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மதிப்பிற்குரிய ஜேன்கிறிஸ்டிபாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மரியாதைக்கு மரியாதைக்குரிய மல்லிகா ஆகியோர் இன்று நேரில் சென்று விவசாயி கிருஷ்ணசாமி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
