தொடக்க கல்வி இயக்கத்தின் சார்பில் சிறந்த பள்ளிக்கான விருது
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்
க.எல்லப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாசத்திரம் வட்டாரத்துக்குட்பட்ட க.எல்லைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடந்தது.
இந்த,நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தீபக்ராஜ், மாவட்ட தலைவர் முகேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா,பாலர் பூங்கா மாவட்ட அமைப்பாளர் பாலமுருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, ஒன்றிய செயலாளர் சக்திவேல், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள மற்றும் மாணவர்களுக்கு புத்தகங்கள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.
