தேனி மாவட்டம்: கீழசொக்கநாதபுரம்: எலக்சன் நேரம் எட்டி பார்க்கும் இவர்கள்... மற்ற நேரம் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?

sen reporter
0


 எலக்சன் நேரம்னா எப்படியும் வந்து ஓட்டு கேட்குறாங்க?

மழை மற்றும் பாதிப்பு என்றவுடன் மாயமாயிடுறாங்க?

நாங்களும்

 மனுசங்கதான்கிறத மறந்திடுறாங்க?


எங்கள் துன்பநிலையை யாரிடம் போய் சொல்வது !?


தண்ணீரில் தத்தளிக்கும் அருந்ததியர் மக்களின் கண்ணீரை தேனி மாவட்ட நிர்வாகம் துடைக்குமா?

இல்லை மறக்குமா? 

இது மக்களின் கேள்வி !?



தேனி மாவட்டம் கீழசொக்கநாதபுரம் முல்லைநகரில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி உள்ளதை தொடர்ந்து சமீபத்தில் பெய்த கனமழையால் அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில்  மழைநீர் சூழ்ந்துள்ளது. 


மழை நீர் வீடுகளுக்குள் சூழ்ந்ததால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.



இப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால் அப்பகுதி குடியிருப்புகள் முழுவதும் கடல்போல் காட்சி தருகின்றன. இதுகுறித்து பலமுறை கீழசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் அருந்ததியர் மக்கள் முறையிட்டும் சமீபத்தில் தான் மோட்டாரை கொண்டு பேரூராட்சி துறையினர் பெயரளவிற்கு மழைநீரை கடத்தினர். 


பெயரளவிற்கு மோட்டாரை வைத்து மழைநீரை கடத்திவிட்டு பேரூராட்சி நிர்வாகத்துறை நிர்வாகமானது சென்றுவிட்டதால் இந்நாள் வரை பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.


 குறிப்பாக கீழசொக்கநாதபுரத்தில் அருந்ததியர் வாழும் இப்பகுதியில் மின்சார வசதியை இல்லாமல் இருளில் பொதுமக்கள் தவிக்கின்றனர்.மேலும்,

மின்சார வசதி இல்லாததால் கொடிய விஷப் பூச்சிகள் வந்து செல்வதாக இப்பகுதி அருந்ததியர் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.


 தொடர்ந்து சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்கேட்டு இப்பகுதிக்கு வருகிறார்களே தவிர பேரிடர் காலங்களில் எங்கள் பகுதியை மட்டும் கண்டுகொள்வதில்லை என அருந்ததியர் மக்கள் புலம்புகின்றனர்.


 கீழசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகமும் எங்களின் கோரிக்கைகளை செவிசாய்ப்பதுமில்லை,கண்டுகொள்வதில்லை என ரத்தக் கண்ணீருடன் அருந்ததியர் மக்கள் காட்சி தருகின்றனர். இதனை கருதி தேனி மாவட்ட நிர்வாகமானது அருந்ததியர் வாழும் இப்பகுதியில் தனிக்கவனம் செலுத்தி மக்களின் கண்ணீரை துடைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா?


என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்... பொறுத்திருந்து பார்ப்போம்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top