பள்ளிப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் மறைவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்வலம்!!!
11/16/2023
0
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா அவர்கள் நேற்று சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழகம் முழுவதும் முற்போக்கு அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவருடைய மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய குழு சார்பில் அனைத்து கட்சி சார்பில் மௌன ஊர்வலமானது பள்ளிபாளையம் ஆவரங்காடு கட்சி அலுவலகத்தில் துவங்கியது. இந்த நிகழ்விற்கு கட்சியின் செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற மவுன ஊர்வலம் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த நிகழ்வில் திமுக, காங்கிரஸ், மதிமுக ,இடதுசாரி முற்போக்கு அமைப்புகள், சமூக நீதிக் கூட்டமைப்பினர் என பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
