ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த கேர் மாலம் சோதனை சாவடி அருகே ஆசனூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.இதுகுறித்து விசாரணை செய்ததில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சரவணன் வயது 32, மற்றும் வேலுச்சாமி 43ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் 300 மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை ஆசனூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம்: மதுபானம் கடத்திய இருவர் கைது!!!
11/22/2023
0
