தருமபுரி மாவட்டம்: அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையினர் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா!!!
11/15/2023
0
அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் சார்பாக பென்னாகரம் அருகே உள்ள ஊத்துக்குளி மாதேஸ்வரன் மலை கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது அனைத்து இந்திய கலாம் அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் முனைவர்.இரா. வினோத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும்,இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளையின் நிறுவனர் சென்னையன், மாநில தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவுனேசன், மற்றும் இத்திருக்கோவிலின் நிர்வாக உறுப்பினர்கள் லோகநாதன், சின்னசாமி, தங்கதுரை இவர்களுடன் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தனர்.
