சாலை வரி உயர்யை ரத்து செய்யக் கோரி டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
சாலை வரி உயர்யை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் செயலாளர் செல்வமுருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைத் தலைவர் முருகன், பொருளாளர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மணிகண்டன் வரவேற்பு உரையாற்றினார். லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார். செய்யது யூசப் நன்றி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
