என்னன்ன வழியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க....
ரூம் போட்டு யோசிச்சாலும் யோசிப்பாங்க...
விசாரனை தீவிரமானால் இன்னும் திடுக்கிடும் விபரம் வரலாம்!
சென்னை பன்னாட்டு
உள்நாட்டு விமான நிலையங்களில்
டி.எப்.எஸ் எனும் நிறுவனம் உணவகங்களைநடத்தி
வருகிறது.
இவர்களின் கட்டுப்பாட்டில்தான்
கிருஷணா சுவிட்ஸ்,சங்கீதா
மற்றும் ஏபி 2 இயங்கி வருகிறது.
இந்த டி.எப்.எஸ் நிறுவனம் பார் உள்பட இரு நிலையங்களிலும்
முக்கிய பிரமுகர்கள் தங்கிச் செல்ல லவுஞ்ச் எனும் நவின ஓய்வறையை நடத்தி வருவது தெரிகிறது.
முதல்வகுப்பு பயணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கிச்செல்வார்கள்.
இப்படி வெளிநாட்டில் இருந்து
சென்னை வரும் கடத்தல் புள்ளிகள் துப்புறவு லோடர்கள் மற்றும் தனியார் சேவையான அகில் நிறுவன ஊழியர்கள் உதவியோடு தங்கக்கடத்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்
டி.எப்.எஸ் உணவகத்தின் ஊழியர் மெல்பின் என்பவர் ஓய்வறையில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்திருந்தார்.
இதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து
தங்கத்தை கைப்பற்றினர்.
பின்னர் ஊழியர் மெல்பின் கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே இது போன்று கடத்த முயன்ற போது பயணி மறந்து வைத்து விட்டுப் போய் விட்டார்,
நான் அதை எடுத்து அதிகாரிகளிடம் கொடுக்கவந்தேன் என தப்பியுள்ளார்.
தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு தப்பிய பயணியை தேடும் பணியில்
சுங்கத்துறையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
