இன்று காலை 167 பயணிகளுடன்
ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் விமானம்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்
இருந்து
புறப்படத்தயாரானது.
பயணிகள் அணைவரும்
சோதனைகள் முடித்து புறப்படத் தயாராக பாதேகாப்புப் பகுதியில் இரவு 10 மணிமுதல் காத்திருந்தனர்.
விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாததால் கைக்குழந்தைகள்
பெண்கள் உள்பட பயணிகள் கூச்சல் போட்டனர்.
ஏர் இந்தியா அதிகாரகளோ விமானநிலைய அதிகாரிகளோ எந்த வித விளக்கமும்
தரவில்லை,
இதனால் ஒருசில பயணிகள்
தங்கள் பயணத்தை ரத்து செய்து தறுமாறு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
பின்னர் காலை 8.40 ற்க்கு
புறப்படும் என
அறிவிக்கப்பட்டது.
பயணிகள்
அலறி அடித்துக் கொண்டு புறப்பாடுப் பகுதிக்குப் போய் வரிசையில் நின்றார்கள்.
இதற்கிடையே நீ முந்தி நான்முந்தி என பயணிகள் வாய்த் தகறாறு செய்தனர்
ஆனாலும் விமானம்
புறப்படவில்லை.
மீண்டும் அறிவிப்பு
பலகையில் விமானம் பிற்பகல்
ஒருமணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து
பயணிகள் அனை வரும் கூச்சல் குழப்பம் செய்தனர்
பின்னர் பயணிகள்
தரணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.
மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் பயணிகளைச்சுற்றி நின்று பாதுகாத்தனர்.
இதன்காரணமாக மற்ற பயணிகள் அங்கிருந்து
வேறு இடத்திற்க்கே மாற்றப்பட்டனர்.
விமாணி வரவில்லை என்றும்
எந்திரக்கோளாறு எனவும்
தெரிய வந்தது இருப்பினும்
அதிகாரிகள்
உரிய விளக்கம்
அளிக்க வில்லை.
இதனால் பயணிகள் இரவு 10 மணிமுதல் 15 மணிநேரம் சிரமப்பட்டு தங்கள்
பயணத்தை
தொடர உள்ளனர்.
மேலும்
சிங்கப்பூர் சென்று கனடா
ஆஸ்த்திரேலியா செல்பவர்கள்
மிகுந்த கவலையுடன்
மாற்று ஏற்பாடு
செய்யவலியுறுத்தினர்.
அப்பகுதிக்குள் சக பயணிகள்
கழி வறை மற்றும்
உணவகம் செல்லமுடியாமல்
உள்ளனர்.நிர்வாகம்
பயணிகளுக்கு தண்ணீர் கூட தரவில்லை.
