சென்னை: நைஜீரிய நாட்டில் இருந்து சென்னைக்கு! விமானத்தில் சட்டவிரோதமாக கொண்டுவந்த போதை பொருள் பறிமுதல்!? போதை பொருளின் மதிப்பு 12 கோடி!! நைஜீரிய நாட்டு இளைஞர் கைது!

sen reporter
0


 நைஜீரிய நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ. 12 கோடி மதிப்புடைய, 1.2 கிலோ கோக்கேன் போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த நைஜீரிய நாட்டு இளைஞரை, சுங்கத்துறை கைது செய்து தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


எத்தியோப்பிய நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவிலிருந்து, சென்னை வரும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், பெரிய அளவில் போதைப்பொருட்கள், சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இன்று அதிகாலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் இன்று காலை அடிஸ் அபாபாவில்  இருந்து, சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது நைஜீரியன் நாட்டை சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில், வந்தார்.


சுங்க அதிகாரிகளுக்கு அந்த நைஜீரிய நாட்டு இளைஞர் மீது  சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் இந்தியாவில் ஆராய்ச்சி மேல்படிப்பு படிப்பதற்காக வந்ததாக கூறினார்.


 அதன்பின்பு மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறு மாறி மாறி பேசியதால், அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். 


அதோடு அவரை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, அவருடைய வயிற்றுக்குள், ஏராளமான, கேப்ஸ்சல் மாத்திரைகளை விழுங்கி வந்திருந்தார்.


இதை அடுத்து விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்று இனிமா கொடுத்து, 71 கேப்ஸ்சல்களையும் வெளியே எடுத்தனர். 


அதை சுங்க அதிகாரிகள் எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் போதைப் இருந்ததை கண்டுபிடித்தனர்.


அந்த 71 கேப்சல்களில், ஒரு கிலோ 201 கிராம் போதைப்பொருள் இருந்தது. அந்தப் போதைப் பொருட்களை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், அதை பரிசோதனை கூடத்தில் பரிசோதித்த போது, அதிக போதை உடைய உயர் ரக கொக்கேன் போதை பொருள் என்று தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 12 கோடி.


இதை அடுத்து சுங்க அதிகாரிகள் நைஜீரிய இளைஞரை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தியதில், இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.


இதை அடுத்து இவர் சென்னையில் யாரிடம் இந்த போதைப் பொருளை கொடுப்பதற்காக எடுத்து வருகிறார்? இதற்கு முன்பு இதே போல் போதை கடத்தல் ஈடுபட்டுள்ளாரா? என்ற பல்வேறு பல்வேறு  கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.


சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், 12 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


* இன்று காலை 

சிங்கப்பூரில் இருந்து 

காலை 10.40ற்க்கு வரவேண்டிய

ஏர் இந்தியா விமானம் 

நான்கு மணிநேரம் தாமதமாக  பிற்பகல் 3.10ற்க்கு வருகிறது.

 இரு விமானங்கள் மூன்று மணி நேரம் 

தாமதமாக புறப்படுகிறது.


* சிங்கப்பூரில் இருந்நது  சென்னைவரும் ஏர் இந்தியா எகஸ்பிரஸ்  விமானம் ஏழரை மணிநேரம் தாமதம்!!

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top