திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை முறையாக பின்பற்றாத தமிழக அரசுக்கு, 15,419 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் இதுவரை 79,098 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும், அதிகபட்சமாக தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாக பல்வேறு மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக தமிழகத்துக்கு, 15,419 கோடி அபராதம் எனவும், மஹராஷ்டிராவுக்கு 12,000 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு 9,688 கோடியும் விதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்திற்கு 5,000 கோடியும், பீஹாருக்கு 4,000 கோடியும், தெலுங்கானாவிற்கு 3,800 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 3,500 கோடியும், கர்நாடகாவிற்கு 3,400 கோடியும் அபராதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.