கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கத் தலைவர் செல்வன் தலைமையில் பல்வேறு கட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செயற்குழு கூட்டம் நடந்தது.
நடந்த செயற்குழு கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;
பத்தாண்டுகள் பணி முடித்த மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்களை தூத்தூர் ஊராட்சியில் முழு நேர பணியாளராக பணி நியமனம் செய்து ஊதியம் வழங்கியதை போன்று அனைத்து ஊராட்சிகளும் வழங்க வேண்டும் எனவும்,
சங்கத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு சரியான பதில் வழங்காமல் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றாததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்தும்,
ஏற்கனவே பணியில் இருந்த பணியாளர்களை தலைவர்கள் பணிநீக்கம் செய்ததை கண்டித்தும் மீண்டும் அவர்களை பணியமர்த்த மாவட்ட ஆட்சியரை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் துணைத் தலைவர் செல்வகுமார், செயலாளர் விஜி, பொருளாளர் கிருஷ்ண மணி, தங்கராஜ், ராஜகுமார் செண்பகராமன் புதூர் மோகன், திருப்பதி சாரம் வேலாயுதம், கொல்லஞ்சி ஊராட்சி தங்கராஜ் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.