தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி 2.5லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
திருச்செங்கோடை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.
ஐஏஎஸ் அதிகாரியான இவர் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார்.
தூத்துக்குடி வெள்ளம் குறித்து அறிந்த அவர் அவரது நண்பர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் மூலம் தூத்துக்குடி மக்களுக்கு
2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
இதில், உணவு, மளிகை பொருட்கள், பாய், போர்வை,உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை,
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு நல ஒருங்கிணைப்பாளர் துரைபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் இணைந்து தூத்துக்குடிநகர், புறநகர், தாமிரபணி கரையோர கிராமங்களில் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றனர்.
