சென்னை: ஃபார்முலா4 மோட்டார் வாகன ரேஸ் தள்ளி வைப்பு: புயல் மழை எதிரொலி! இனி வருங்காலங்களில் பொதுமக்கள் நலன்கருதி, தீவுத்திடல் சாலைகளில் அனுமதி வழங்கக்கூடாது.

sen reporter
0


 சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்து செல்ல பொதுமக்கள் தீவுத்திடலை சுற்றிலும் உள்ள சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.


இந்த சாலைகளில் ஃபார்முலா 4 மோட்டார் வாகன பந்தயம் கடந்த 9,10 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.


சென்னைக்கு வெளியே நடத்த வேண்டிய இந்த பந்தயத்தை  இங்கு நடத்த அனுமதியும் தமிழக அரசிடம் பெருந்தொகையை ஸ்பான்சர் ஆக  பெற்றதாகவும் தகவல் வெளியானது.


மிக்ஜாம் புயல் மழைக்கு முன்பு அந்த சாலைகளை முடக்கி வைத்து அரசு இயந்திரங்கள் இரவு பகலாக  பந்தயத்துக்கு ஏற்ப சாலையை தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.


அந்த பாதையில் பயணிக்க வந்த பல்லாயிரம் மக்கள் மாற்றுப் பாதைக்கு 

அனுப்பப்பட்டு அலைக்கழிக்க பட்டனர்.


 புயல் மழையால் இப்போட்டியை தற்போதைக்கு கைவிட்டு அடுத்த சீசனில் இதே இடத்தில் நடத்த ஏற்பாட்டாளர்கள்

முடிவு செய்துள்ளனர்.


இப்போட்டியைஅடுத்த சீசனில் சென்னைக்கு வெளியே நடத்துமாறு

அறிவுறுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும்

பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளை

கொடுக்கக் கூடாது. என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் பெரும் கருத்தாக உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top