ஸ்ரீலங்கா விமான நிலையத்திலிருந்து 66 தங்க பிஸ்கட்டுகளை உள்ளடைக்குள் மறைத்து கடத்திச் சென்ற விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்திய நபரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலிஅருக்கொட
தெரிவித்தார்.
தங்க பிஸ்கட்டுகள் வைத்திருந்த சந்தேகநபர், 7.7 கிலோகிராம் நிறையுடைய 66 தங்க பிஸ்கட்டுளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுளாளர்.
ஶ்ரீலங்கன் கேட்டரிங் (விமான சேவை உணவகம்) நிறுவனத்தில் பணிபுரியம் 35 வயதான ஊழியர் ஒருவரே இச் செயலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்த தங்க பிஸ்கட்டுகளின் மதிப்பு
17.6 கோடி ரூபாய் (176 மில்லியன்) என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
.jpg)
.jpg)