தேனி நகராட்சி: நகராட்சி தலைவர் பொதுமக்களின் சிரமங்களை கண்டுகொள்ளவில்லை ! இயற்கை இடற்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என தெரியாதா? பொதுமக்கள் கேள்வி!?

sen reporter
0


 பிறந்தால் வழிபிறக்கும் என்ற பழமொழியை போல் தை பிறந்தாலாவது தேனி நகராட்சி நிர்வாகத்தினர் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது நகராட்சி மக்களுக்கும் ஒரு வழியை ஏற்படுத்த முன்வரவேண்டும் என  நகர மக்கள் புலம்பல்.


தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தேனி நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டது.


 மேலும்,ஆங்காங்கே மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தெருக்களில் தேங்கியது. குறிப்பாக கேஆர்ஆர் நகர் மூன்றாவது தெருவில் மின்கம்பம் மீது மரங்கள் விழுந்தும் மேலும், இந்த தெருக்களில் வாகனங்கள் செல்லமுடியாமலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.


இதுபோன்று பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட்டதை தொடர்ந்து பொதுமக்கள் தேனி தீயணைப்பு நிலையத்திற்கும், தேனி நகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர். 


தகவலை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை அப்புறப்படுத்தினர். நீண்டநேரம் போராடி மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டபின் மின்சாரம் வழங்கப்பட்டது.


 தேனி நகராட்சி தலைவருக்கு உதவிகள் வேண்டி பலமுறை பொதுமக்கள் தொடர்பு கொண்டும் நகராட்சி தலைவர் செவிசாய்க்காமல் பொதுமக்களின் சிரமங்களை கண்டுகொள்ளவில்லை. 


தேனி நகராட்சி தலைவரின் இந்த செயலானது இயற்கை இடற்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகஅரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என தெரியாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


பேரிடர் காலங்களில் பொதுமக்களை கண்டுகொள்ளாத தேனி நகராட்சி  தலைவர் மீது தேனி நகர் பொதுமக்கள் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top