வழிகாட்டும் குறள் மணி(78)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதும்
தூண்டில்பொன் மீன் விழுங்கி யற்று.(திருக்குறள் 931)
விளக்கம் :
வெற்றியே பெறுவதனாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது. எனவே சூதாட்டம் எந்த வடிவத்தில் நடந்தாலும் அதன்கிட்டேயே போய் விடாதீர்கள்.!
அதிகாரம் 94 சூது.
