தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைப்படி அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சையதுகான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டமானது முல்லைப் பெரியார் அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பிடிஆர் கால்வாய், மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களுக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கோரியும்,
திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.