தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் விளாத்திகுளத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், பொதுச்செயலாளர் வேல்முருகன், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் - தூய்மை காவலர்கள் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணன் உட்பட சங்க நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட பலர் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்;
தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களின் பணித்தன்மையை உன்னதப் படுத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணி நேரம் உள்ளிட்டவற்றை நெறிப்படுத்தவும், இவர்களது கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்வேன் என்றும் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊராட்சி செயலாளர்கள் மாநில தலைவர் ஜான்போஸ்கோ, பேசுகையில்;
தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நேரத்திற்கு இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
45 ஆண்டுகளாக ரூ.4000-த்திற்கு விற்பனை செய்து வரும் இவர்களுக்கு ஓய்வூதியம் என்று எதுவும் வழங்கப்படவில்லை அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு ஓய்வூதியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியின் மூலமாக ரூ.10,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி, மாநகராட்சிகளில் வழங்கப்படும் ஊதியத்தை போன்று காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் மேல்நிலை மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக வைத்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி, தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் தொடர் போராட்டங்களை நடத்தவிருப்பதாகவும் தமிழக அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.