நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடு கடை கோவில் கதவுகளை உடைத்து எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களே தின்றுவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது.
நேற்று இரவு 11:30 மணியளவில் பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே உள்ள அத்திமா நகர் பகுதியில் வனத்துறையால் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது கரடி.
இந்த கரடியானது சில மாதங்களாக இப்பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது இந்த கரடியை பிடிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை அடுத்து வனத்துறையினர் இந்த கரடியை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர் வனத்துறை வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்காமல் போக்கி காட்டி வந்த கரடி வனத்துறையினர் வைத்திருந்த தூண்டில் வசமாக சிக்கியது. இந்த கூண்டில் எண்ணெய் மற்றும் பல வகைகள் வைக்கப்பட்டிருந்தன அதை உண்பதற்காக கரடி உள்ளே நுழைந்தபோது வசமாக சிக்கிக் கொண்டது.
தொடர்ந்து கூண்டில் சிக்கிய கரடியை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பதற்கு கரடி கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த கரடி சிக்கியதால் இப்பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
