மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய குழு சென்னை விமான நிலையம் வருகை.
சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், ஏற்பட்டுள்ள மழை,வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில்,6 பேர் கொண்ட மத்திய குழு, டெல்லியில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில்
திமான் சிங், (ஊரக வளர்ச்சி அமைச்சகம் ) என்பவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
மேலும் இரவு 11:20 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் குநல் சதியார்தி மற்றும் ஏ கே ஷிவாரி இருவரும் இரு விமானங்களில் சென்னை வந்தனர்
இவர்கள் அனைவரும் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர விடுதியில் இரவு தங்குகின்றனர்.
மேலும் பாவியா பாண்டே ரங்கு நாத் அதாம் காலை 8.40 மற்றும் 9.40 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வர உள்ளனர்.
