கிருஷ்ணகிரி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்!!
12/12/2023
0
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சூளகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, கோதுமை மாவு, பருப்பு, ஆயில் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.விமல்ரவிகுமார் அவர்கள் வழங்கினார்.
