கன்னியாகுமரி, நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் (65) மற்றும் ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயனாளிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 20க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தக்கலையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஊழல் மற்றும் எதிர்ப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயனாளிகள் சங்கத்தின் தலைவராகவும் ரோட்டரி சங்க உறுப்பினராகவும் பொது மற்றும் சமூக சேவையாற்றி வருவதோடும் சமூகத்தில் நேர்மையான நன்மதிப்பு மற்றும் அந்தஸ்தில் வாழ்ந்து வருவதாகவும் , எங்கள் சங்கத்தின் மூலமாக படிக்காதவர்களுக்கும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கும் கூலி வேலை பார்ப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊழல் எதிர்ப்பு பற்றியும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை அஞ்சல் சாமியார் மடம் பருத்தி விளை முகவரியைச் சார்ந்த நபர் எந்தவித அனுமதியும் விதிமுறை மீறியும் கட்டுமானங்கள் கட்டியுள்ளது சம்பந்தமாக பல துறைகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் நடவடிக்கை எடுக்க உதவி செய்யுமாறு கேட்டு ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கம் உறுப்பினர் திலகன் என்பவர் எங்கள் சங்கத்தில் மனு கொடுத்தார்.
தலைவர் என்கிற முறையில் அது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் , கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி இணை இயக்குனர் , மற்றும் வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி செயல் அலுவலர் , ஆகியோருக்கு நான் புகார் அளித்திருந்தேன், நான் புகார் அளித்திருந்ததை தெரிந்து கொண்ட அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரம் கண்டால் தெரியும் ஒரு நபருடன் என் வீட்டில் அத்து மீறி நுழைந்து என் மனைவியிடம் என்னை கொன்று விடுவதாகவும் புகார் மனுவை வாபஸ் வாங்கும் படியும் மிரட்டி சென்றுள்ளார்.
மேற்படி வழக்குக்கு வேண்டி தக்கலை காவல் நிலையத்தில் விசாரணைக்காக சென்றிருந்தபோது எங்கள் சங்க உறுப்பினர் மைக்கேல் ராஜ் என்னுடன் வந்திருந்ததை பார்த்த மேற்படி நபர் மைக்கேல் ராஜை வழிமறித்து, உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்,
மேற்படி நபர் தற்போது என்னையும் என் குடும்பத்தினரையும் என் சங்க உறுப்பினர்களையும் கொலை செய்வதற்கும் அதனை விபத்தாக மாற்றுவதற்காக வாகனங்களை வாடகைக்கு அமைத்துள்ளதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் மேற்படி நபரால் எந்நேரமும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆவணம் செய்யும்படி மனுவில் கூறப்பட்டுள்ளது.
