தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்:
1000 குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி!
அனைத்து உடைமைகளையும் வெள்ளநீர் அடித்து சென்றது?
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண (பொருட்கள்) உதவிகள் வழங்கும் பணியை ஓசூர் அசோக் லேலண்டு (யூனிட் 2 ) எம்ளாயீஸ் யூனியன் செயலாளர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.
கடந்த வாரம் பெய்த மழையினால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்று கரையோரம் உடைப்பு ஏற்பட்டு வடக்கு ஆத்தூர் பகுதியில் அதிகமான வெள்ளநீர் தெருக்களிலும், வீடுகளிலும், பஜார் கடை முழுவதும் வெள்ளம் புகுந்தது.
தொடர்ந்து 5 நாட்கள் வெள்ள நீர் வடியாமல் அப்படியே நின்றது. அனைத்து உடைமைகளையும் வெள்ளநீர் அடித்து சென்றது. இதனால் இப்பகுதியில் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் அடைந்து பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் உண்ண உணவின்றி,குடிக்க தண்ணீர் இன்றி மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதை அறிந்து இப்பகுதியில் ஓசூர் அசோக் லேலண்ட் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு ரூ15 லட்சம் மதிப்பிலான நிர்வாண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஆத்தூர் குச்சிகாடு அருகே ஜே ஜே நகரில்(தூய்மை பணியாளர் பகுதியில் மூலம்) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன உதவி மேலாளர் ஜி சிவக்குமார், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, மதர் சமூக சேவை நிறுவனத் துணைத் தலைவர் எ.பொ. சுதாகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக ஓசூர் அசோக் லேலண்ட் (யூனிட் 2) எம்ப்ளாஸ் யூனியன் செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வடக்கு ஆத்தூர், குச்சிக்காடு , ஜே ஜே நகர் (தூய்மை பணியாளர் குடியிருப்பு) கைலாசபுரம், குரும்பூர், அங்கமங்கலம், மயில் ஓடை, சுப்பிரமணியபுரம், செல்வரத்தினம் நகர் (தூய்மை பணியாளர் குடியிருப்பு) வளவன் நகர், எழுவரை முக்கி, ஆனந்தபுரம், இந்திரா நகர், கல்விளை, வீரபாண்டியபட்டினம், சுனாமி நகர், மற்றும் தண்ணீர் பந்தல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 1500 ரூபாய் மதிப்புள்ள போர்வை, துண்டு, அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் மற்றும் பிஸ்கட் வகைகள் மொத்தம் 1000 குடும்பங்களுக்கு ரூ 15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இப்பணியில் மேல ஆத்தூர் ஊராட்சி கவுன்சிலர் குட்டி ராஜா, சமூக ஆர்வலர் சதாசிவாம் மற்றும் ஓசூர் அசோக் லேலண்ட் (யூனிட் 2) எம்ளாயீஸ் யூனியன் ஊழியர்கள் 25 பேர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கினர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

