வழிகாட்டும் குறள்மணி(80)
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"(திருக்குறள் 948)
விளக்கம்:
ஒரு மருத்துவர் நோயாளியை பரிசோதித்து இன்ன நோய் என்று கண்டுபிடித்து நோயின் காரணத்தை அறிந்திடல் வேண்டும். பின்னர் அதை தணிக்கும் சிகிச்சை முறையை தேர்வு செய்து நோயாளியின் உடலுக்குப் பொருந்தும் வகையில் அதைக் கொடுத்து குணப்படுத்த வேண்டும்.
அதிகாரம் 95, மருந்து.
