மிக கடுமையான இந்த புயல் மழை வெள்ளத்தில் எந்த ஒரு ஆன்லைன் நிறுவனமும் உங்களை தொலைபேசியில் அழைக்கவில்லை.
உங்கள் அழைப்பையும் எந்த ஆன்லைன் நிறுவனமும் ஏற்கவில்லை யோசித்து பாருங்கள் உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் உங்கள் சிறு வியாபாரிகளின் இன்றும் உங்களை புன்னகையுடன் வரவேற்று உங்களுக்கு தேவையான பொருளை விற்பனை செய்து வருவதை மனதில் கொள்ளுங்கள்!
நீங்கள் உங்கள் அருகே உள்ள கடைகளை கவனிக்காமல் மீண்டும் ஆன்லைன் மற்றும் பெரிய நிறுவனங்களை தேடி சென்றால் மீண்டும் ஒரு பேரிடரின் போது உங்கள் வீட்டுக்கு அருகே அந்த சிறு கடை வியாபாரி இருப்பார்கள் என்பது கேள்வி குறியே?
எனவே உங்களுக்கு தேவையான பொருட்களை வீணாகாமல் தேவைக்கு ஏற்ப தேவையான பொருள்களை தேவையான அளவில் மட்டுமே வாங்கி நீங்களும் சிக்கனமாகி உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுங்கள் நம்ம கடை இது நம்மஊர்கடை.
