குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டில் நிதியில் இருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் சுசீந்திரம் பிரசித்தி பெற்ற தாணுமாலசுவாமி கோயில் கலையரங்கத்திற்கு மேற்கூரை அமைத்துதர விஜய் வசந்த் எம்பியிடம் பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்று அவர் தொகுதி மேம்பாட்டில் இருந்து 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணி முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு கலையரங்கத்திற்கான மேற்கூரையை திறந்து வைத்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து அன்னதான நிழச்சியை தொடங்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் மகேஷ் சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுஷியா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்