தேனி மாவட்டம் உத்தமபாளையம் 18ம் கால்வாயிலும், பிடிஆர் கால்வாயிலும் உடனடியாக தண்ணீர் திறக்ககோரி பெரியார் வைகை பாசன விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்வானது உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
