கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரியைடுத்து உள்ள வாகொரி மூடக்குள்ளேயே கூடலூர் மர வட்டி பரம்பு சேர்ந்த பிரதஜுஸ் என்பவரை புலி தாக்கி கொன்றுள்ளது.
மதிய வேளையில் பசு மாட்டிற்கு பசுவிற்கு புல் அறுக்க சென்றபோது புலி தாக்கி கொன்றுள்ளது. தொடர்ந்து கடித்து இழுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள வயல்வெளி புதரில் மறைத்து வைத்து உடலை கடித்து தின்றதாக தெரியவருகிறது.
இறந்தவரின் உடல் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுவா புலியை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
.jpg)