கோவையில் இருந்து சென்னை வந்த பாஜக மாநில தலைவர் திரு.கே. அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளியளித்தார்.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தது குறித்து கேட்டதற்கு?
கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் 95 சதவீதம், 97 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக அமைச்சர்களே கூறினார்கள்.
தற்போது 42 சதவீதம் மட்டுமே முடிந்திருப்பதாக அமைச்சரே சொல்கிறார் எனவே இதில் விவாதம் செய்ய ஒன்றுமில்லை.
நிவாரண தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பின் கணக்கீட்டு நிவாரணத் தொகையினை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மரியாதை கொடுக்கவில்லை என்று திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் என்ன கொத்தடிமைகளா?
அரசு அதிகாரிகள் மீது காட்டும் கோபத்தை திமுகவினர் நிவாரண பணிகளில் காட்டினால் நன்றாக இருக்கும் என்று தனது பேட்டியில் கூறினார்.
