நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் தேவாலை பகுதியில் இயங்கி வரும் தார் கலவை ஆலையால் பொது மக்களுக்கள் பல்வேறு உடல்நல கேடுகளுக்கு ஆளாகின்றனர்.
பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலை பகுதியில் ராயல்அம்சா என்பவர்க்கு சொந்தமான தார் கலவை அலை இயங்கி வருகிறது.
இந்த தார் கலவை ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நித்தம் நித்தம் உயிரோடு போராடி வருகின்றனர்.
இந்த சூழல் குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த தார் கலவை ஆலையை மூடக்கோரி பல வருடங்களாக போராடி வருகின்றனர். எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அரசுக்கு இந்த ஆலையை மூடக்கோரி புகார்கள் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் குடும்பத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் இப்பகுதியில் தார் கலவை ஆலை திறப்பதற்கு முன்பாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம் மேலூர் பகுதியில் கேன்சர் நோய் சுமார் 30ற்கும் மேற்பட்டோருக்கு உடல்நல கோளாறுகள் வந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை தமிழக அரசு உள்ளிட்ட துறைகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இந்த தார் கலவை ஆலையை மூடுவதற்கு யாரும் முன்வரவில்லை.
ஏன் இந்த தார் கலவை ஆலையை மூட அரசு அதிகாரிகள் முன் வருவதில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த தார் கலவை ஆலையை மூடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசு பொது மக்களின் நலனில் அக்கரை காட்டுமா?
இல்லை ஆலையின் செயல்பாட்டிற்கு துணைபோடுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

