நீலகிரி மாவட்டம் பந்தலூர் விறகு சேகரிக்க சென்றவரை யானை தாக்கி உயிர் இழப்பு!
நீலகிரிமாவட்டம் கூடலூர் வனக்கோட்டம், பந்தலூர் சரகம், பந்தலூர் பிரிவு, தேவாலா காவல் பகுதி நாடுகாணி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி(50),
ராமமூர்த்தி நேற்று சனிக்கிழமை விறகுகள் சேகரிப்பதற்காக சதேவாலா வனப் பகுதி பிரிவு 53 நிலம் காட்டிற்குள் சென்று இருக்கிறார்.
விறகு சேகரிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அவருடைய உறவினர்கள் இன்று ஞாயிற்றுகிழமை காலை வனச்சரகர் அவர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உள்ளே சென்று தேடி பார்த்த பொழுது தேவாலா வன எல்லைப் பகுதியில் இருந்து உள்ளே சுமார் 700 மீட்டர் தொலைவில் ராமமூர்த்தி உடல் கிடந்ததை பார்த்தனர்.
சுற்றி பார்த்ததில் அங்கு யானையின் கால் தடயங்கள் இருந்தது மேலும் அங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் நான்கு யானைகளும் நின்றிருந்ததையும் பார்த்துள்ளனர்.
உடனடியாக அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு வனச்சரக வாகனத்தில் அனுப்பப்பட்டது.
அந்த தேவாலா வன பகுதியில் ஏற்கனவே நேற்று ஒரு யானை கூட்டம் இருந்தது அவை காட்டை விட்டு வெளியே வராமல் இருக்க யானை விரட்டும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அதையும் மீறி ராமமூர்த்தி உள்ளே சென்று இருக்கிறார். என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ராமமூர்த்தியின் உயிரிழப்பு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

