ஆவடி மாநகராட்சி 20வது வார்டு முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ள அவல நிலை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட இருபதாவது வார்டில் தென்றல் நகர் பகுதியில் சுமாரான மழைக்கே மக்கள் வெளிவர முடியாத அளவிற்கு மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த ஆட்சி காலத்தில் 6 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விடப்பட்டு மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மழை நீர் கால்வாய் கட்டியும் மழைநீர் கால்வாயில் செல்லாமல் சாலைகளிலேயே இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனைப்பட்டு வருகிறார்கள்.
ஆறு கோடி ரூபாயில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் வீணாக்கப்பட்டதா அல்லது சரியான முறையில் கட்டப்படவில்லையா என்று அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
முதல்வர் இதற்கு உடனடியாக உத்தரவிட்டு ஆய்வு செய்து இதன் ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உடனே இந்த பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்வாரா அல்லது சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் அவர்கள் தலையிட்டு மழை நீரை அகற்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்.

