திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே கிணற்றின் தவறி விழுந்து ஒருவர் பலி
ஸ்ரீராமபுரம் அருகே கருப்பிமடம் நெடுஞ்சாலை அருகில் பூபதி என்பவரின் தோட்டத்து கிணற்றில் குருவப்ப நாயக்கனூரை சேர்ந்த முத்துச்சாமி மகன் தண்டபாணி (45) என்பவர் தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.
இதனை அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறை அலுவலர் சிவன் ராஜு தலைமையில் தீயணைப்பு ஊழியர்கள் கிணற்றில் உயிரிழந்த தண்டபாணியை உடலை மீட்டனர்.
சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.