வழிகாட்டும் குறள் மணி (72).
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு (திருக்குறள் 788).
பொருள்: அரையில் அணியும் ஆடை அவிழ்ந்து தானாக நழுவும்போது , நம்மை அறியாமலேயே நமது கைகள் அதனைப் பற்றி இறுக்குவதனைப் போன்று ஆபத்து நேரும்போது அழைக்காமலேயே உயிர் நண்பன் ஓடிவந்து உதவுவான்.
(அதிகாரம் 79,நட்பு.).