ஸ்டாண்டில் பொதுமக்களையும், அவரச ஊர்திகளையும், சக்கை சக்கையாக பிழியும் தனியார் டிராவல்ஸ்..
டிராவல்ஸ் நடத்தும் நபர்களால் ஒட்டுமொத்த உத்தமபாளையம் நகர் பொதுமக்களும் பொறுமையிழந்துள்ளனர்.
உத்தமபாளையம் பஸ்ஸ்டாண்டில் மக்கள் பதிவு செய்து சென்னை செல்லும் தனியார் பேருந்துகள் தினமும் நடுரோட்டை மறைத்து மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் "என்வழி தனிவழி" என்ற நோக்கில் வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றன.
இதனால் அரசு பேருந்துகளும், அவரச ஊர்திகளும் அவதி அடையும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது. வழக்கம்போல் நேற்று இரவும் தனியார் பேருந்துகளும் 1மணி நேரத்திற்கு மேலாகியும் முழு பூசணிக்காயே சோத்தில் மறைத்து வைத்தார்போல் இந்த தனியார் பேருந்துகளும் சாலை முழுவதையும் மறைத்து இடையூறு ஏற்படுத்துகின்றன.
இந்த செயலால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
தனியார் டிராவல்ஸ் வைத்து நடத்தும் நபர்களின் சுய லாபத்திற்கு மக்களை வாட்டுவது ஏன்?என உத்தமபாளையம் நகர மக்கள் புலம்பி வருவது மட்டுமல்லாமல் உத்தமபாளையம் பஸ்ஸ்டாண்டில் தனியார் டிராவல்ஸ் வைத்து நடத்தும் நபர்களுக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது யார்? இதுகுறித்து அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இனியும் இந்த பஸ்ஸ்டாண்டில் இப்படி தொடர்ந்தால் பொதுமக்கள் கூறியதுபோல் அதிகாரிகள் ஒத்துழைப்பது உறுதியாகிவிடும். இதனை கருதி உத்தமபாளையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு!!
காத்திருப்பு கனவாகாமல் இருந்தால் சரி.
.jpg)