சென்னை:
சந்தனப் பேழையில் சர்க்கரைத் தேவன் உறங்க ஒரு சகாப்தம் விடை பெற்றதய்யா!
விடை பெற்றார் மாமனிதர்! புரட்சி கலைஞர் விஜயகாந்த் உடல் சந்தனப் பேழையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தேமுதிக தலைவரும் நடிகருமான "புரட்சிக் கலைஞர்" விஜயகாந்த் அவர்களது உடல் தமிழ்நாடு அரசின் முழு இறுதி மரியாதையுடன் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய திருவுடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் மனித நேயமும் - துணிச்சலும் நம் நினைவுகளில் என்றென்றும் குடிகொண்டிருக்கும். புகழ் வணக்கம்!- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய திருவுடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க…
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே... முதல்வர் மு.க.ஸ்டாலின்
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...
வாழ்க! வாழ்கவே! கேப்டன் புகழ் வாழ்கவே! ஓங்குக! ஓங்குகவே! கேப்டன் புகழ் ஓங்குகவே! என விண்ணதிர முழங்கி தங்க தலைவனை நிரந்தர நித்திரை யாத்திரைக்கு வழியனுப்பி வைத்த ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள்...
கேப்டன்! கேப்டன்! என்ற கதறலுடன் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
விஜயகாந்த் உடல் சந்தனப்பேழையில் மூடப்பட்டு நல்லடக்க குழியில் இறக்கப்படுகிறது
விஜயகாந்த் உடல் மீது வெள்ளைத் துணி போர்த்தப்பட்டு சந்தனப் பேழையில் நீண்ட தொடு துயில்!!
காணச் சகிக்கலையே காவியத் தலைவன் நிரந்தரமாய் கண்மூடி உறங்குவதை என செல்போன் வெளிச்சத்தை பாய்ச்சி தொண்டர்கள் கதறல்
தேமுதிக தொண்டரணி, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினர்
மகத்தான மாமனிதர் மண்ணில் இருந்து விடைபெற்றாரே!
அனைத்து இறுதி சடங்குகளும் இந்து முறைப்படி நிறைவடைந்தன.
சந்தனப் பேழைக்குள் கண்ணயர்ந்து உறங்குதய்யா கறுப்பு நிலா என்கிற கதறல்களுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறார் மதுரை வீரன்.
மகன்கள் இருசேர தந்தைக்கு இறுதி சுடரேற்றி வழிபட்டனர்.
கொடி போர்த்திய விஜயகாந்த் உடலில் "கோடி துணி" போட்டு வழியனுப்பும் ரத்த சொந்தங்கள்.
ஒப்பாரியும் அழுகை ஓலமும் ஒருசேர கண்ணீர் பெருமழையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறார் காவிய நாயகன் "புரட்சிக் கலைஞர்"!
விஜயகாந்த் குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இறுதி சடங்குகளை மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் செய்தனர்.
பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.
கறுப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் முகத்தை உற்றார் உறவுகள் கடைசி தருணமாக தரிசித்து வழியனுப்பினர்.
தந்தை விஜயகாந்த் கரம் பிடித்து, கால்களில் வணங்கி விடை கொடுத்த சொக்கத் தங்கத்தின் தவப் புதல்வர்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன்.
காவிய நாயகனுக்கு கண்ணீர் கதறலுடன் பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினர் இறுதி விடை கொடுத்தனர்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட தலைவர்களின் இறுதி மரியாதையுடன் விடை பெற்றார் சொக்க தங்கம் விஜயகாந்த்!
தென்பாண்டிச்சீமையிலே ஊழவன் மகனாய் உதித்து தர்ம தேவதையாய், நீதியின் மறுபக்கமாய் வாழ்ந்து பட்டணத்து ராஜாவாய் மண்ணுள் உறங்க விடை பெற்றாரே "வீரபாண்டியன்"!
அன்னை பூமி" விடை கொடுக்க "வசந்த ராகம்" பாடிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்" உறங்க சென்றதே!
24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
விஜயகாந்த் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது
விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நேரு பங்கேற்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உத்யநிதி ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினர்
கேப்டன் விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை!
தமிழ்நாடு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்
விஜயகாந்த் கையை இறுகப்பிடித்து கலங்கி நின்ற பிரேமலதா.. அந்த இறுதி நிமிடங்கள்! கண்ணீருடன் பிரியாவிடை!
கடைசியாக ஒருமுறை கேப்டன் முகத்தை பார்க்க! நேராக விஜயகாந்த் முன் நின்று விடைகொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உதவி கேட்டு லெட்டர் எழுதினேன்! யாருனே தெரியாத எனக்கு கல்யாண செலவு பண்ணார்.. கதறிய விஜயகாந்த் ரசிகர்
‛கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் மக்கள் செலுத்திய நன்றி.. இது தான் பிரியாவிடை!!!
அவர் சகோதரர் போன்றவர்’.. விஜயகாந்த் இறுதி மரியாதையில் குறையேதும் கூடாது.. ஸ்டாலின் போட்ட உத்தரவு!
மலர் போல மனம் படைத்த விஜயகாந்த் ஊர்வல மலர் அலங்கார செலவை ஏற்ற சென்னை மாநகராட்சி.. மழை போல பூக்கள்!


