உலகம்: இலங்கை: இலங்கையில் சுனாமி நினைவேந்தல்! வடமராட்சியில் கண்ணீருடன் நினைவு கூறப்பட்டது!!

sen reporter
0


சுனாமி ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்த துயரநாளின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் வடமராட்சியில்  நினைவுகூறப்பட்டது.


இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரை காவுகொண்டது ஆழிப்பேரலை.


2004ம் ஆண்டு இதே நாள் தென் கிழக்கு ஆசியாவை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை காரணமாக தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கையில் 35 ஆயிரத்து 322 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அத்துடன் 21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர்.



இலங்கையில் 3 ஆயிரத்து 954 சிறுவர்களை அநாதரவாக்கியது அந்த ஆழிப்பேரலை.இதன்போது

5இலட்சத்து 15 ஆயிரத்து 115 பேர் இடம்பெயர்ந்திருந்தனர்.


 இலங்கை முழுவதுமாக 3 ஆயிரத்து 954 சிறுவர்கள் தங்கள் பெற்றோரை இழந்தனர். தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் உள்ள ஆறு மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்திருந்தன.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்த ஆயிரக்கணக்கான உடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட உடுத்துறை, கட்டைக்காடு, மணற்காட்டு மற்றும் வெற்றிலைகேணி ஆகிய பகுதிகளில் 19வது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.


வடமராட்சி கிழக்கு - உடுத்துறை:

சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அனுஷ்டிக்கப்பட்டது.


உடுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் இடம்பெற்ற நினவேந்தல் நிகழ்வில் சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்தினர்.


வடமராட்சி கிழக்கு - மணற்காடு:


மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் விஷேச பூஜை வழிபாடுகள் இடம் பெற்று திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து 72 பேரின் உலகங்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்ட மணற்காடு சவக்காலைப் பிட்டியிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.


வடமராட்சி - புலோலி:


இதே போன்று புலோலி சூசையப்பர் ஆலயத்திலும் இன்று காலை 06.30 மணி அளவில் விஷேச பூஜை வழிபாடுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு தொடர்ந்து அப் பகுதியில் உயிர் நீத்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.


அதே போன்று ஆழியவளை, தாளையடி, செம்பியன்பற்று, பருத்தித்துறை பகுதிகளில் ஆங்காங்கே அடக்கம் செய்யப்பட்ட இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top