வேலூரில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர் அம்முககவினர்.
வேலூர் மாநகர அமமுக சார்பில் வேலூர் பழைய மாநகராட்சி கட்டடத்தில் முகப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அவரது 107 -வது பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து பின்பு 500 ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கினர்.
இதில் அமமுக மாநகர மாவட்ட செயலாளர் ஏ. எஸ்.ராஜா தலைமை வகித்தார். முன்னாள் துணை மேயர் தருமலிங்கம், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா, தலைமைக் கழகப் பேச்சாளர் பிரம்மபுரம் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி பிரம்மபுரம் சந்தர் கணேஷ், பாபு, செயற்குழு உறுப்பினர் பாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
