வேலூர் மாவட்டம், காட்பாடி 10வது வட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் அனுசரிப்பு நடந்தது.
திருமண மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 1000 பேருக்கு அன்னதானத்தை வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலம், 10வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் கே. பி. ரமேஷ் தலைமை வகித்தார்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்தோரை அழைத்து அனைவருக்கும் உணவு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் எம்.டி.பாபு, காட்பாடி மேற்கு பகுதி செயலாளர் நாராயணன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
