தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அமைந்துள்ள முத்து பூங்காவிற்கு மீரான் பாளையம் தெருவை சேர்ந்தவர்கள் முருகன் கற்பகம் தம்பதியினர் இவர்களுக்கு அனிதா(16), மனோஜ் குமார்(13) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனோஜ் குமார் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பள்ளியில் படித்து கொண்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம் உள்ளே உள்ள தனது தந்தை நடத்தி வரும் சிறிய ஹோட்டலில் தந்தைக்கு உதவியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆங்கில வருட பிறப்பினை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மனோஜ்குமார் மாலை 6:00 மணி அளவில் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள அம்பாள் நகரில் அமைந்துள்ள பேரூராட்சிக்குட்பட்ட முத்து பூங்காவிற்கு நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.
அங்கிருந்த மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மனோஜ்குமார் கீழே விழுந்துள்ளார்.
இதனை அடுத்து உடன் சென்ற நன்பர்கள் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை.
இதனையடுத்து உடன் இருந்தவர்கள்
மனோஜ்குமாரின் பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மனோஜ்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மனோஜ் குமாரை தூக்கிக்கொண்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கே மனோஜ்குமார் உடலை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக மனோஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனோஜ் குமார் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மின்சாரம் தாக்கி மனோஜ்குமார்
இறந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
