நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கூட்டுறவு சங்கத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த 1.753 மூட்டை பருத்தி 43 லட்சத்திற்கு விற்பனையானது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கவுண்டம்பாளையம் விற்பனை மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
ராசிபுரம் கவுண்டன் பாளையம் அத்தனூர் முத்துகாளியப்பன் பட்டி பாளையம் பட்டணம் வேலம்பாளையம் சிங்கானந்தபுரம் காக்காவேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1.753 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.
சேலம் நாமக்கல் கரூர் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் விவசாயிகள் முன்னிலையில் அதிகாரியில் ஏலத்தை நடத்தினர்.
இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவண்டால் அதிகபட்சம்
7.336ற்க்கும் குறைந்தபட்சம் 6.869ற்க்கும் கொட்டு ரகம் பருத்தி குவின்டால் அதிகபட்சம் 4.170ற்க்கும்
குறைந்தபட்சம் 4.050ற்கும் விற்பனையானது.
ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த1.753 மூட்டை பருத்தி நாற்பத்தி மூணு லட்சத்துக்கு ஏலம் போனது என்ன அதிகாரிகள் தெரிவித்தனர்
