செய்யாறு,
செய்யாறு அண்ணாநகரில் ரூ.1.60 லட்சத்தில் ஸ்ரீ கல்யாண முருகர் கோயிலில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு வஸ்திர தானம் நேற்று வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அண்ணா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கல்யாண முருகர் கோயிலில் ஆண்டுதோறும் தனுர் மாதம் சோமவாரத்தை முன்னிட்டு புரோகிதர், அர்ச்சகர், பூசாரிகள், உழவார பணியாளர்களுக்கு வஸ்திர
தானம் வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் செய்யாறு தாலுகாவில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு வஸ்திர தானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. ஸ்ரீ கல்யாண முருகர் ஆலய ஸ்தாபகரும், வழக்கறிஞருமான கே.வெங்கட்ராமன் ரூ.1.60 லட்சத்தில் 137 திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000/- மதிப்பில் வேஷ்டி, டைரி, பஞ்சாங்கம், பொங்கல் பொருட்கள் (அரிசி, வெல்லம், பருப்பு ) தொகுப்பும், வஸ்திர தானமும் மற்றும் 23 உழவாரப் பணியாளர்களுக்கு ரூ.1000 மதிப்பில் புடவை, லுங்கி, சர்ட், துண்டு, (ஸ்வீட்) இனிப்பும் வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீ கல்யாண முருகர் கோயிலுக்கு 5 கோபுர கலசங்கள் தானமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரதி வெங்கட்ராமன், ஆறுமுகம், லட்சுமணன், விக்கிரமாதித்தன், கிருஷ்ணன், அம்மையப்பன், ஏழுமலை மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

.jpg)