ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு நகர மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீசார் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ராசாத்தி என்ற பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
