நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையத்தில் மோட்டார் போக்குவரத்து துறை ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து துறை வாகன ஆய்வாளர் சிவகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில இளைஞரணி துணைத் தலைவர் ஆதவன் தலைமை வகித்தார. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விதிமுறை மீறி செயல்படுகிறார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துபவர்களை உடன் வைத்துக்கொண்டு வாகன தணிக்கை மேற்கொள்கிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டனர்.
திராவிட கழக மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் செல்வ முருகன் நடுவம் ராஜாராம் தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் கார்த்தி புரட்சிகர இளைஞர் முன்னணி வாசு. மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ். உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிறைவாக மாவட்ட இளைஞரணி தலைவர் மாணிக்கம் நன்றி கூறினார்.
.jpg)