2024-நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டிஇக்கூட்டத்தில் நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
பா.சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு, தென் சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, நெல்லை, தென்காசி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)