திமுகவின் அடிப்படை உறுப்பிரும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், தற்போதைய முதல்வர் திரு,மு.க.ஸ்டாலின் சகோதரியும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தற்போது திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
திருமதி, கனிமொழி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்:
2018ம் ஆண்டு முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான தேர்வுகுழுவால், சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.
2012ல்உள்துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராக பணியாற்றிய கனிமொழி, மனித வள மேம்பாட்டு துறையின் கட்டாயகல்வி சட்டத்தின் செயலாக்க துணை குழு உறுப்பினராக ஆகஸ்ட் 2012 முதல் பணியாற்றினார்.
2012ல் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் பொதுச்சபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
2010ல் கிராமப்புற மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக பணியாற்றினார் கனிமொழி.
2009ல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற வளாக உணவு மேலாண்மை கூட்டு குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
2007ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனவு மொழி, 2009ம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.
2005ம் ஆண்டு அரசியலில் நுழைவதற்கு முன்னர், குமுதம் -தமிழ் வார இதழின் பொறுப்பு ஆசிரியராகவும், தி இந்து பத்திரிக்கையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ் செய்தித்தாளான தமிழ் முரசுவின் சிறப்பு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
2008 ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி என்ற கிராமத்தில் சோதனை முயற்சியாக துவங்கப்பட்ட வேலைவாய்ப்பு முகாமை, கனிமொழி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைத்து வருகிறார்.
2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பல்வேறு கிராமங்களுக்கும் காட்டுத்தீ போல பரவி நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் இதே போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த கனிமொழி திட்டமிட்டுள்ளார்.
இத்தனையும் திறம்பட செய்து காண்பித்த கனிமொழியை கொள்கைபரப்பு செயலாளராக ஆக்கினால், பாமர மக்கள் மற்றும் கிராம மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் இவரது செயலும், திமுகவின் செயல்பாடும் அமைந்துள்ளது.
கனிமொழி வந்துட்டாங்க!
ஒரே சொல்லில் மிரண்ட பாஜக? கனிந்த கரிசனத்தில் கரையும் விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், இப்போதைக்கு பலம் வாய்ந்த கூட்டணியாக இருப்பது திமுக மட்டுமே.
அந்தவகையில், அடுத்தக்கட்ட அதிரடியில் முனைப்பு காட்ட துவங்கி உள்ளது.
பல யூகங்கள் கசிந்து கொண்டிருந்தாலும், அத்தனையும் நொறுக்கி தள்ளிவிட்டு, வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தி, அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாகி வருகிறாரார் திமுக எம்பி கனிமொழி.
கடந்த தேர்தலை பொறுத்தவரை, திமுகவின் வெற்றியில் கனிமொழியின் பங்கு அபாரமானவை.
அளவிடமுடியாதவை. அர்ப்பணிப்பு நிறைந்தவை என்றே சொல்லலாம்.
அன்று பொள்ளாச்சி சம்பவம் மற்றும் சாத்தான்குளம் சம்பவம் என தமிழகத்தை உலுக்கிய இரண்டு பிரச்சனைகளை, கையில் எடுத்து போராடியவர்களில் முதன்மையானவராகவும் கனிமொழி திகழ்ந்திருக்கிறார்.
இந்த போராட்டங்களை எல்லாம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோடு மட்டுமே பொருத்தி பார்க்கப்படவில்லை.
மாறாக, தென்மண்டலங்களில் திமுகவின் பலத்தை கூட்ட காரணமாக இவை இருந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
திமுக பலம்: அதனால்தான், தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு தரும்படி மூன்று வருடங்களுக்கு முன்பேயே அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி கேட்டார்கள்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பே கனிமொழிக்கு இந்த பதவியை தந்தால், அது திமுகவுக்கு கூடுதல் பலத்தை உருவாக்கும், அமமுக, அதிமுகவின் செல்வாக்கை எளிதாக குறைத்து விடலாம் என்றும் வலியுறுத்தினார்கள்.
அதுமட்டுமல்ல, அன்று மறைந்த தலைவர் கருணாநிதி இருந்தபோது, மு.க.அழகிரி எப்படி செயல்பட்டாரோ, அதுபோலவே தென்மண்டலத்தை தன் வசம் கனிமொழி கொண்டுவந்துவிடுவார் என்றும், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியிருந்ததை நினைவுகூர வேண்டியிருக்கிறது.
அந்த அளவுக்கு கனிமொழியின் செல்வாக்கும், செயல்பாடுகளும் மிகுந்த கவனத்தை கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஏற்படுத்தியபடியே உள்ளது.
இதோ இப்போதுகூட கனிமொழியின் அணுகுமுறையானது மக்களின் கவனம் பெற்று வருகிறது.. ஒருபக்கம் பாஜக எதிர்ப்பு, மறுபக்கம் விறுவிறு செயல்பாடு என களமிறங்கிவிட்டார்.
அதைவிட முக்கியமாக, சமீபத்தில் நடந்த மகளிர் மாநாடும், அந்த மாநாட்டில் மூத்த தலைவர் சோனியா காந்தியை வரவேற்றிருந்ததும், தேசிய அளவில் கனிமொழி மீதான கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பிளான்கள்: எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், திமுகவின் கனகச்சிதமான பிளான்களும் துரிதமாகி வருகின்றன. எப்படியும் இந்த முறையும், தூத்துக்குடி தொகுதியிலேயே கனிமொழி போட்டியிட நிறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
இதில், முக்கியமானது கனிமொழியின் பிரச்சாரமாகும். எனவே, கனிமொழி + உதயநிதி இவர்கள் 2 பேரும்தான், தமிழகம் முழுக்க திமுகவின் பிரச்சாரங்களை பிரதானமாக முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும்நிலையில், அந்த வியூகங்களை அடியோடு உடைக்கவும், கனிமொழியின் பிரச்சாரம் பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஜெயலலிதா: வழக்கமாக, பெண்கள் ஓட்டு என்பது அதிமுகவில் எப்போதுமே அதிகம்.. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பெரிதாக பெண் தலைவர்கள் யாரும் சோபிக்கவில்லை.. கனிமொழி அளவுக்கு ஈடுகொடுத்து பேசக்கூடிய பேச்சாளர்களும் அதிமுகவில் தற்சமயம் இல்லை.. எனவே, திமுகவில் பெண்களின் ஓட்டுக்களை கணிசமாக பெறும் அளவுக்கு, கனிமொழியின் பலம் தற்போது பெருகியிருப்பதும் பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.
அதேபோல பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்திலும் கனிமொழியின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. நேற்றுகூட அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேட்டார்கள். "அறநிலையத்துறை என்ற ஒன்று பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருக்காது" என்று அண்ணாமலை பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, "ஆட்சிக்கு வந்தால்தானே? பாஜக ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம்" என்று ஒற்றைவரியில் கூலாக பதிலளித்திருந்தார்.
பாஜக, அதிமுக: ஆக, ஒருபக்கம் பாஜக எதிர்ப்பு + மறுபக்கம் மகளிர் ஓட்டுக்கள் + இதற்கு நடுவில் நலத்திட்ட உதவிகள் என எம்பி தேர்தலுக்கு தயாராகி வருகிறாரார் என்கிறார்கள்.
கனிமொழி கருணாநிதி தொகுதி மக்களும், கனிமொழியின் கனிந்த அன்பில் கரைந்து கொண்டிருப்பதால், இதை அதிமுக, பாஜக கட்சிகள் உற்றுக்கவனித்து கொண்டிருக்கின்றன.
அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.
மக்கள் எதிர்பார்ப்பாய் இருக்கும் கொள்ளைபரப்பு செயலாராகும் வாய்ப்பு கனிமொழி அவர்களின் பிறந்தநாளில் வழங்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
தொழில்முறை பத்திரிகையாளர் மற்றும் கவிஞரான கனிமொழி, 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற மேலவைக்கு திமுக உறுப்பினராக தேர்த்தெடுக்கப்பட்டதன் மூலம் அரசியலில் அடியெடுத்துவைத்தார்.
திமுகவின் இலக்கிய அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், கலை,இலக்கியம் மற்றும் பகுத்தறிவு ஆகியவை குறித்து சிறப்பாக பேசக்கூடிய கனிமொழி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சிறந்த தலைவர் என அரசியல் அரங்கில் தனது பெயரை பதியவைத்துள்ளார்.
இவர் தி இந்து தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியினமகளான இவர், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் முன்னாள் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சகோதரி ஆவார். தமிழகத்தின் தனிப்பெரும் பெண் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள கனிமொழி, சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதை துணை ஜனாதிபதி திரு.வெங்கைய நாயுடுவின் கைகளால் பெற்றுள்ளார்.
இப்படி பல ஆளுமையை கொண்ட திருமதி, கனிமொழி இன்னும் சிறப்பாக பட்டிதொட்டியெங்கும், பாமரனும் பயன்பெறும் வகையில் பங்காற்ற மக்களோடு சென் மீடியா நெட்ஒர்க் பத்திரிகை நிறுவனமும் திருமதி, கனிமொழி அவர்களும் ஒரு பத்திரிகையாளர், கவிஞர் என்ற முறையில் வாழ்த்துகிறது.
.jpg)

.jpg)
.jpg)
